ADDED : நவ 02, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்தவர் மரியதாஸ்,85; நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் ஜேம்ஸ், 45; அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, மரியதாசை தேடிவருகின்றனர்.
