விபத்தில் சிக்கிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறப்பு
விபத்தில் சிக்கிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறப்பு
UPDATED : நவ 02, 2026 08:19 PM
ADDED : நவ 02, 2026 08:17 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: அடையாளம் தெரியாத வாகன மோதியதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் ராயர் மகன் சுதாகர்,46; தொழிலாளி. இவர் கடந்த 30ம் தேதி தனது பைக்கில், புதுச்சத்திரத்தில் இருந்து கொத்தட்டை நோக்கி சென்றார்.
கொத்தட்டை டோல்கேட் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
விபத்தில் படுகாயமடைந்த சுதாகர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
