/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2 கி.மீட்டருக்குள் ஓட்டுச்சாவடி; கருத்து தெரிவிக்க அழைப்பு
/
2 கி.மீட்டருக்குள் ஓட்டுச்சாவடி; கருத்து தெரிவிக்க அழைப்பு
2 கி.மீட்டருக்குள் ஓட்டுச்சாவடி; கருத்து தெரிவிக்க அழைப்பு
2 கி.மீட்டருக்குள் ஓட்டுச்சாவடி; கருத்து தெரிவிக்க அழைப்பு
ADDED : மார் 19, 2025 09:27 PM
கடலுார்; 2 கி.மீட்டருக்குள் ஒட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்த அரசியல் கட்சியினர் ஆலோசனை தெரிவக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தல் நடத்தை விதிகளை வலுப்படுத்துவது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில், அனைத்து மாநில தலைமை தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்த சரியான நேரத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை ஆணையத்திடம் வரும் 31ம் தேதிக்குள் சமர்பிக்க அறிவுறுத்தியது. இது தொடர்பாக, ஆலோசனை கூட்டங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அரசியல் கட்சிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்., அனைத்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு வாக்காளர்களிடம் நன்முறையில் நடப்பது குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
அனைத்து ஓட்டு சாவடிகளும், வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ., துாரத்திற்கும், 800 முதல் 1,200 வாக்காளர்களை கொண்டதாகவும் அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
எனவே, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்படும் கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.