ADDED : ஜன 10, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கி பயனாளி களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்கினர்.
அதில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்து.ஒன்றிய செயலாளர் திருமாவளவன், தி.மு.க., கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

