/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பூங்குணம் கிராம பெண்கள் மனு
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பூங்குணம் கிராம பெண்கள் மனு
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பூங்குணம் கிராம பெண்கள் மனு
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பூங்குணம் கிராம பெண்கள் மனு
ADDED : ஜன 28, 2025 05:03 AM

கடலுார் :   பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.
பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராம பெண்கள் கொடுத்துள்ள மனு;
பூங்குணம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இப்பகுதி மக்கள் கால்நடை வளர்ப்பு, விவசாய கூலி வேலை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வாழ்ந்து வருகின்றோம். அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தினர். இந்நிலையில் பூங்குணம் ஊராட்சியை
பண்ருட்டி நகராட்சியோடு இணைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எங்கள் ஊராட்சியை பண்ருட்டியுடன் இணைத்தால் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்பட்டு விவசாயம் சார்ந்த எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
எங்கள் ஊராட்சி பகுதியில் எவ்வித தொழிற்சாலையும் இல்லை.போதிய வருவாய் தரக்கூடிய வேறு தொழில் ஏதும் இல்லை. மேலும், நகராட்சியுடன் இணைத்தால் வரி அதிகரிக்கும். எனவே பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியோடு இணைக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

