ADDED : நவ 18, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
வேப்பூர்: கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்ற தபால் துறை ஊழியர், லாரி மீது மோதி இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்,26; சென்னை, ஆயிரம் விளக்கு தபால் நிலையத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்தார். இவர், நேற்று (நவ.,17) கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தனது (டி.என்.38 சிஎம் 9964) பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று (நவ.,18) காலை 6:00 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த பாசார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோது விபத்துக்குள்ளானது. அதில், சதீஷ், 26, அதே இடத்தில் இறந்தார்.
விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
