/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
5ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
5ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 27, 2024 05:30 AM
கடலுார்: பெண்ணாடத்தில் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட நிர்வாகம், தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த 8, 10, 12ம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். வேலை வாய்ப்பக பதிவு விபரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.inல் பதிவு செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் கார்டு மற்றும் சுய விவர குறிப்புடன் நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.