/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
/
சிலம்பம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஏப் 16, 2025 08:22 PM

கடலுார்: காரைக்காடு கிராமத்தில், தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கடலுார் அடுத்த காரைக்காடு கிராமத்தில் குறவஞ்சி சிலம்பம் சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிலம்பம் போட்டி நடந்தது.
குடிகாடு, ஈச்சங்காடு, சேடப்பாளையம், வழிசோதனைபாளையம், செம்மங்குப்பம், காரைக்கால், எஸ்.புதுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவில், கமலேஸ்வரன், ராமநாதன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மூத்த சிலம்ப பயிற்சியாளர் வித்யாபதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கராத்தே பயிற்சியாளர் ஆறுமுகம், காரைக்காடு கிராம தலைவர் ராமநாதன், தமிழ், சங்கர், தங்கம், ஜெகன், பயிற்சியாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை பயிற்சியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.