/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள்... முடக்கம்
/
கடலுாரில் அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள்... முடக்கம்
கடலுாரில் அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள்... முடக்கம்
கடலுாரில் அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள்... முடக்கம்
UPDATED : செப் 26, 2024 06:44 AM
ADDED : செப் 25, 2024 11:42 PM

கடலுாரில், புதுநகர் போலீஸ் நிலையம் முன்பு, தனியார் பள்ளி மாணவியர் சாலையை கடக்க போலீசார் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க,அ.தி.மு.க., ஆட்சியில், கடலுார் எம்.பி., யாக இருந்த அருண்மொழித்தேவன் சாலையை கடக்க நடைபாதை பாலம் அமைத்து கொடுத்தார்.
கட்டி முடித்த பின் மாணவியர்கள் பயன்படுத்தி வந்த நடைபாதை பாலம், ஆட்சி மாற்றத்திற்கு பின் நிறுத்தப்பட்டு முன் எப்போதும் போல்போலீசாரின் துணையோடு சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது.
அதேபோல், கலெக்டர் அலுவலகம் அருகே குளிர்சாதன வசதியுடன் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி இருந்தவரை சிறப்பாக செயல்பட்டது. அதைத்தொடர்ந்து ஆட்சி பறிபோன கையோடு பஸ் நிறுத்தமும் கேட்பாரற்ற நிலைக்கு சென்றது. அதனுள் இருந்தகுளிர் சாதன இயந்திரம், நாற்காலிகள் சமூக விரோதிகள் திருடி சென்றுவிட்டனர். அதன் பின்னர் பிச்சைக்காரர்கள் தங்கும் இடமாகமாறிவிட்டது.
மேலும், கடலுாரில் இருந்து பண்ருட்டி வழியாக விழுப்புரம் செல்ல 53 கி.மீ., துாரம் செல்ல வேண்டும்.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்து மிகுதி, அதிக பஸ் நிறுத்தம் காரணமாக இந்த துாரத்தை கடக்க சராசரியாக 1.30 மணி நேரம் ஆகிறது.எனவே, 10 கி.மீட்டர் குறைவான துாரத்தில், கடலுாரில் விழப்புரம் செல்ல தென்பெண்ணையாற்றை ஓட்டினார்போல் சாலை அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பிள்ளையார் சுழி போடப்பட்டது.
கடலுார் தென் பெண்ணையாற்று கரையில் இருந்து துவங்கும் இந்த கஸ்டம்ஸ் சாலை, பண்ருட்டி வி.கே.டி., சாலையில் உள்ள கண்டரக்கோட்டை பாலம் அருகே இணைகிறது. இச்சாலை முதற்கட்ட பணியில் கடலுார் ஆல்பேட்டையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது. இன்னும் 50 சதவீதசாலை போட வேண்டிய நிலையில், ஆட்சிமாற்றத்தால் பணி கிடப்பில் போடப்பட்டது.
இச்சாலையின் 2ம் கட்ட பணியை துவங்குவது தொடர்பாக, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் மற்றும் சிறப்பு அதிகாரிகள் பல முறை கடலுாரில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிகாரிகள் இந்த சாலைப்பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே, கட்சி பேதம் பார்க்காமல் மக்களுக்கு இந்த சாலையால் ஏற்படும் பயன்களை உணர்ந்து ஆளுங்கட்சியினர் அரைகுறையாக உள்ள பணியை தொடர முயற்சி மேற்கொள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

