/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊர் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு கடலுார் மாநகராட்சியில் 'காரசாரம்'
/
ஊர் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு கடலுார் மாநகராட்சியில் 'காரசாரம்'
ஊர் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு கடலுார் மாநகராட்சியில் 'காரசாரம்'
ஊர் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு கடலுார் மாநகராட்சியில் 'காரசாரம்'
ADDED : ஆக 27, 2025 11:22 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட ஊர் பெயரை மாற்றியதற்கு, பா.ம.க., கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டத்தில் 'காரசார' விவாதம் நடந்தது.
கடலுார் மாநராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், பா.ம.க., கவுன்சிலர் சரவணன் பேசுகையில், 'கடலுாரில் உள்ள வன்னியர்பாளையம் என்ற ஊர் பெயரை யாரிடமும் கருத்து கேட்காமல் எப்படி மாற்றலாம் என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'முதல்வர் உத்தரவுபடி, ஜாதி பெயரில் இருந்ததை பெயர் மாற்றம் செய்யப்பட்டது' என, துணை மேயர் தாமரைச்செல்வன் பதில் அளித்தார்.
'காலனி என்பதை மாற்றியமைக்க முதல்வர் கூறியுள்ளார், நீங்கள் யாரிடம் கேட்டு இதை செய்தீர்கள்' என மீண்டும் சரவணன் கேள்வி எழுப்பினார். அப்போது குறிக்கிட்ட வி.சி., கவுன்சிலர்கள் சரிதா, புஷ்பலதா ஆகியோர் எழுந்து, 'தேவையில்லாமல் மாநகராட்சி கூட்ட நேரத்தை வீணடிக்க கூடாது. அந்தந்த வார்டு பற்றி பேசும்போது மட்டும் பேசினால் போதும்' என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
த.வா.க., அருள்பாபு பேசுகையில்,'நகர்கள், தெருக்கள் போன்றவற்றில் உள்ள ஜாதி பெயர்களை அகற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறீர்கள், அதன்படி, மாநகராட்சி வளாகத்தில் உள்ள தங்கராஜ் முதலியார் என்ற பெயரை மாற்றலாமே. பெயர் மாற்றத்தை இங்கிருந்து தொடங்குவோம்' என்றார். பெயர் மாற்றத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து த.வா.க., கவுன்சிலர் கண்ணன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
அதற்கு தி.மு.க., தமிழரசன், கடலுாரில் 'ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம்' என்பதையும் மாற்ற வேண்டும்' என்றார். இப்படியாக காரசார விவாதம் நடந்தது.
அதனை தொடர்ந்து, மேயர் பேசுகையில், வன்னியர்பாளையம் பகுதி வார்டு கவுன்சிலர் மற்றும் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நகராட்சிக்குள் உள்ள தங்கராஜ் முதலியார் என்ற பெயரை மாற்ற அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு உங்களுக்கு பதிலளிக்கிறேன் என கூறினார்.