/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேனர் கிழித்ததை கண்டித்து மறியல்: 9 பேர் மீது வழக்கு
/
பேனர் கிழித்ததை கண்டித்து மறியல்: 9 பேர் மீது வழக்கு
பேனர் கிழித்ததை கண்டித்து மறியல்: 9 பேர் மீது வழக்கு
பேனர் கிழித்ததை கண்டித்து மறியல்: 9 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2025 03:02 AM

கடலுார்:கடலுார் அருகே பேனர் கிழித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகிருஷ்ணன்,24, இவர் வழக்கறிஞர் படிப்பை முடித்ததற்காக சேடப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே 4ம் தேதி இரவு பேனர் வைத்திருந்தார். இதை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கிழித்தனர். இதைக்கண்டித்து நேற்று காலை 9:௦௦மணிக்கு சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மணிகிருஷ்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுநகர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 9:15 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மணி கிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் மீது முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.