நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மஞ்சகுப்பத்தில் பட்டியலின ஒற்றுமையை சீர்குலைக்கும் உள்ஒதுக்கீடு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடஒதுக்கீடு பாதுகாப்பு பேரவை புகழேந்தி தலைமை தாங்கினார். இடஒதுக்கீட்டு பாதுகாப்பு இயக்க தலைவர் அழகப்பன் முன்னிலை வகித்தார். சாமிதுரை மணிராஜன் வரவேற்றார்.
விடுதலை புரட்சிப்புலிகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, புதிய புரட்சி கழகம், பஞ்சமி நிலமீட்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

