ADDED : டிச 11, 2025 05:54 AM

திட்டக்குடி: பெண்ணாடம் பேரூராட்சி, கருங்குழி தோப்பில், 20க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கவில்லை.
இதனை கண்டித்து பழங்குடி மக்கள் நலச்சங்கம் மற்றும் மா.கம்யூ., சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மா.கம்யூ., வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி ஊர்வலமாக வந்து, மண்டல துணை தாசில்தார் மஞ்சுளாவிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது, மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, பழங்குடி சங்க மாவட்ட நிர்வாகி அசோகன், மாவட்ட துணை தலைஙவர் மாயவன், பெண்ணாடம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன், திட்டக்குடி நகர செயலாளர் வரதன், ஜனநாயக வாலிபர் சங்க வட்ட பொருளாளர் ஹரிபாபு, விவசாய தொழிலாளர் சங்க வட்ட பொருளாளர் கருப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

