/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு அதிகாரிகள் சிறைபிடிப்பு
/
கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு அதிகாரிகள் சிறைபிடிப்பு
கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு அதிகாரிகள் சிறைபிடிப்பு
கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு அதிகாரிகள் சிறைபிடிப்பு
ADDED : மே 21, 2025 02:47 AM
கடலுார் : கடலுார் துறைமுகம் அருகே தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.
தமிழகம் முழுதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர்.
நேற்று காலை கடலுார் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ராஜசேகர் தலை மையில் அதிகாரிகள் துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தில் கொடிக்கம்பங் களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசியக்கொடி ஏற்றுவதற்காக மக்கள் பயன்படுத்தி வந்த கம்பமும் இடித்து அகற்றப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.,யை சிறைப்பிடித்தனர். தகவலறிந்த துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கொடிக்கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.