/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
ADDED : அக் 16, 2025 11:42 PM

பரங்கிப்பேட்டை: தீபாவளி பண்டிகையையொட்டி, துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தச்சக்காடு, வல்லம்படுகை மற்றும் பு.முட்லுார் ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் 30 பேர், ஒரு நபருக்கு கல்வி உதவி தொகை ரூ. 10 ஆயிரம் மற்றும் குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கி, துாய்மைப் பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கினார்.விழாவில், ஊராட்சி செயலாளர் ராஜீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். கார்த்திக் ராஜா, நன்றி கூறினார்.