/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்
/
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : அக் 03, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுா : கடலுார் வி ஸ்கொயர் மால் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த ஆயுதபூஜை விழாவில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சந்தோஷ்குமார், கவுரவ தலைவர், தி.மு.க., மாவட்ட பிரதி நிதி சிவானந்தம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், நிர்வாக இயக் குநர் சரவணன் ஆகி யோர், ஆட்டோ டிரைவர் களுக்கு சீருடை வழங்கினர்.
சங்க துணைத்தலைவர் ஏழுமலை மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், டிரைவர்கள் பங்கேற்றனர்.