ADDED : நவ 19, 2025 08:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் பணியாற்றும், தள்ளுவண்டி பணியாளர்கள் மற்றும் டெங்கு மஸ்துார் பணியாளர்களுக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக 'ரெயின்' கோட் வழங்கப்பட்டது.
பேரூராட்சி மன்ற தலைவர் பழனி பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கி மழைக்காலங்களில் பாதுகாப்பாக பணியாற்ற அறிவுறுத்தினார்.
அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, துப்புரவு அலுவலர் துரைராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

