ADDED : மே 03, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் அவதரித்தார்.
நேற்று ராமானுஜர் ஜெயந்தியையொட்டி அவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.

