/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு
/
கடலுாரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு
கடலுாரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு
கடலுாரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு
ADDED : பிப் 05, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில், இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகத்தின் அளவு குறைபடும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், கடலுார் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வருகிறது. இந்த குடிநீர் உந்துக்குழாய், விழுப்புரம்-நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலை அமையும், இடத்தில் மாற்று வழியில் அமைக்கும் பணி இன்று (5ம் தேதி) நடக்கிறது. இதனால், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நாளை (6ம் தேதி) மற்றும் 7ம் தேதி ஆகிய இரு நாட்கள், காலை குடிநீர் விநியோகத்தின் அளவு குறைவாக இருக்கும்.