/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வட்டார வள மைய ஜன்னல் கதவு திருட்டு
/
வட்டார வள மைய ஜன்னல் கதவு திருட்டு
ADDED : ஏப் 08, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: வட்டார வள மைய அலுவலக ஜன்னல் கதவுகளை திருடி சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த கல்வி வட்டார வள மையம் செயல்பட்டு வருகிறது.இவ்வலுக ஊழியர்கள் கடந்த 5ம் தேதி மாலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது, அலுவலக இரும்பு ஜன்னல் கதவு திருடு போயிருந்தது.
இதுகுறித்து வளமைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

