/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி
/
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி
ADDED : டிச 05, 2024 05:48 AM

கடலுார்; கடலுார் பெரியகங்கணாங்குப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் நிவாரண உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
கடலுாரில், பெஞ்சல் புயல் காரணமாக மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபம், வில்வராயநத்தம் நிவாரண முகாம் மற்றும் கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கணாங்குப்பம் நிவாரண முகாம் ஆகிய பகுதிகளில் பாய், போர்வை, கைலி, புடவை, பிரட், பிஸ்கட், மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சுமார் 1,600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
பெரியகங்கணாங்குப்பத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை, அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணைமேயர் தாமரைச்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிரல்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.