
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மழையால் பாதித்த குடும்பத்திற்கு, அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரது ஓட்டு வீடு சேதமடைந்தது.
இதையறிந்த அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., நேற்று நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது, மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள்அழகன், ஒன்றிய செயலர் மருதை முனுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குறிஞ்சி செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

