ADDED : ஜன 28, 2025 05:02 AM
விருத்தாசலம் :'தினமலர்' செய்தி எதிரொலியால், ரவுண்டானாவில் தி.மு.க.,வினர் வைத்திருந்த பேனர் அகற்றப்பட்டது.
விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோ.பொன்னேரி ரவுண்டானாவில், கம்மாபுரம் ஒன்றியம், கார்குடல் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்களை நியமித்த தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ராயர் மற்றும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அவர்களது படங்களுடன் கூடிய ராட்சத பேனர் வைக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் நுாறு நாள் திட்டத்தில் பணி நியமனம் செய்ததாக தி.மு.க., நிர்வாகிக்கு நன்றி தெரிவித்து வைத்த சர்ச்சையான பேனர் குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து தி.மு.க.,வினரே சர்ச்சை பேனரை அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.