/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்து ஏற்படுத்திய பள்ளம் சீரமைப்பு
/
விபத்து ஏற்படுத்திய பள்ளம் சீரமைப்பு
ADDED : நவ 08, 2025 01:51 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே விபத்து ஏற்படுத்திய பள்ளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.
நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கம் பகுதி, நகரத்தில் இருந்து, 2 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. வான்பாக்கம் செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் உள்ள பழமையான பாலத்தின் தடுப்பு கட்டைகள் பல மாதங்களுக்கு முன் முற்றிலும் இடிந்து விழுந்தது.
பாலம் உள்ள இடத்தின் இருபுறமும் சாலையை ஒட்டி 7 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் இருந்தது. பலமுறை பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு பைக்கில் சென்ற இறைச்சி கடை தொழிலாளி சலீம்பாஷா, 24; அந்த பள்ளத்தில் விழுந்து இறந்தார். அதிகாரிகள் அலட்சியத்தாலேயே விபத்தில் ஒருவர் பலியானது குறித்து 'தினமலர்' நாளிதழி ல் செய்தி வெளியானது.
இந்நிலையில் கமிஷ்னர் கிருஷ்ணராஜன்,சேர்மன் ஜெயந்தி உத்தரவின்பேரில் பள்ளத்தின் இருபுறமும் பெரிய பைப்கள் வைத்து பள்ளத்தை மூடினர்.

