/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில் நின்று செல்ல கோரிக்கை
/
பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில் நின்று செல்ல கோரிக்கை
பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில் நின்று செல்ல கோரிக்கை
பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில் நின்று செல்ல கோரிக்கை
ADDED : நவ 09, 2025 06:52 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் 'ஹால்ட்' ஸ்டேஷனாக உள்ளதை, தரம் உயர்த்தி 'பிளாக்' ஸ்டேஷனாக மாற்றி தர வேண்டும். பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக கூடுதல் பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும். விரைவு ரயில்கள் நின்றுச்செல்லவும், நடைமேடை நீட்டிப்பும் செய்துதர வேண்டும்.
ரயில் பயணிகள் வசதிக்காக நடந்து வரும் குடிநீர் வசதி பணியை, துரிதப்படுத்த வேண்டும். ரயில் நிலைய நடைமேடை பகுதியில் பயணிகள் உட்கார வசதியாக கூடுதல் இருக்கைகள், இடிக்கப்பட்ட பழைய ரயில் நிலைய கட்டடத்தில், புதியதாக ரயில் நிலைய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
துணை தலைவர் ஐய்யப்பன், செய்தி தொடர்பாளர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

