தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சுடுகாட்டு பாதையை சரி செய்திட கோரிக்கை

சுடுகாட்டு பாதையை சரி செய்திட கோரிக்கை

சுடுகாட்டு பாதையை சரி செய்திட கோரிக்கை


UPDATED : நவ 15, 2026 06:57 PM

ADDED : நவ 15, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 06:57 PM ADDED : நவ 15, 2026 06:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: சுடுகாட்டுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு உள்ளது.

இந்த சுடுகாட்டில் காமாட்சிபேட்டை, நடுப்பேட்டை, சொக்கநாதன்பேட்டை, பழையபாளையம், கச்சிராயர்குப்பம், சொக்கநாதன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து, நடக்க முடியாத நிலை இருந்தது.

இதனால் இந்த சுடுகாடு செல்லும் சாலையில் சாத்திப்பட்டு செல்லும் சாலையிலிருந்து 500., மீ அளவிற்கு மட்டும்

கடந்தாண்டு புதியதாக தார் சாலை போடப்பட்டது.

மீதி உள்ள சாலையை அப்படியே விட்டு விட்டனர். இதனால் இந்த சாலை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஒற்றையடி பாதையாக மாறி வருகிறது.

இந்த சாலை வழியாக அப்பகுதியில் உள்ள, 200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்திற்கு விவசாயிகள் சென்று வருகின்றனர்.

இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்க செய்ய செல்பவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ஆகையால் கடலுார் ஒன்றிய அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தரமான சாலை போட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us