ADDED : அக் 26, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு வரும் பொது மக்கள் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையை கடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.
இதனால், சாலையை கடக்க முயலும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதுடன், உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

