/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
/
சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 24, 2025 11:52 PM
பெண்ணாடம்: பெ.கொல்லத்தங்குறிச்சி கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே சாய்ந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றில் பெ.கொல்லத்தங்குறிசச்சி - நல்லுார் சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் அச்சமடைகின்றனர். மேலும், பலத்த காற்று வீசும்போது, மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பெ.கொல்லத்தங்குறிச்சி சாலையோரம் சாய்ந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.