தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரவுண்டானாவில் ‘சிக்னல்’ அமைக்க கோரிக்கை

ரவுண்டானாவில் ‘சிக்னல்’ அமைக்க கோரிக்கை

ரவுண்டானாவில் ‘சிக்னல்’ அமைக்க கோரிக்கை


UPDATED : நவ 15, 2026 04:53 PM

ADDED : நவ 15, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 04:53 PM ADDED : நவ 15, 2026 04:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெ.பொன்னேரி ரவுண்டானாவில் ‘சிக்னல்’ அமைத்து வாகனங்கள் முறையாக செல்ல நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம்–திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கனரக, இலகுரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்கிறன.

இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்ததால் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும், விபத்துகளை தடுக்க கடந்த, 10 மாதங்களுக்கு முன் தனியார் சிமெண்ட் ஆலை சார்பில், ‘ஹைமாஸ்’ விளக்கும் அமைக்கப்பட்டது.

ஆனால், ரவுண்டானாவில் ‘சிக்னல்’ வசதி இல்லாததால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் அரியலுார் மாவட்ட சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் ரவுண்டானாவில் தாறுமாறாக வளைந்து செல்லும்போது, விருத்தாசலம் – திட்டக்குடி மார்க்கத்தில் செல்லும் பஸ், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. ரவுண்டானாவில் ‘சிக்னல்’ அமைக்க பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை.

எனவே, ரவுண்டானாவில் பெரும் விபத்து ஏற்படும் முன் ‘சிக்னல்’ அமைத்து விபத்தை தடுக்க நெடுஞ்சலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us