தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டீ கடைக்காரை வெட்டிய வாலிபர் கைது

டீ கடைக்காரை வெட்டிய வாலிபர் கைது

டீ கடைக்காரை வெட்டிய வாலிபர் கைது


UPDATED : நவ 15, 2026 05:02 PM

ADDED : நவ 15, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 05:02 PM ADDED : நவ 15, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: டீ கடைக்காரை, கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த உத்தமசோழமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் வீரசுந்தரம். இவரது, மகன் செந்தில்நாதன், 26; சிதம்பரத்தில் டீ கடை வைத்துள்ளார்.

இவர் கடந்த, 13ம் தேதி பைக்கில் செல்லும்போது, உத்தமசோழமங்களம் பஸ் நிறுத்தம் அருகே வளைவில், அதே பகுதியை சேர்ந்த தேவராஜின் பைக், செந்தில்நாதன் பைக் மீது லேசாக இடித்துவிட்டது. இதை, தட்டிக்கேட்ட செந்தில்நாதனை, தேவராஜ் திட்டி, கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, செந்தில்நாதன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, தேவராஜை, 21; கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us