/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க... கட்டுப்பாடு; சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை
/
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க... கட்டுப்பாடு; சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க... கட்டுப்பாடு; சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க... கட்டுப்பாடு; சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை
ADDED : ஆக 11, 2025 06:46 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதவாறு கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளன.
களிமண்ணால் செய்யப்பட்டது மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெ ர்மாகோல் கலவை யற்றதுமான சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப் பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.
மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
அறிவிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் சிலைகளை கரைக்கக் கூடாது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டும்.
அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்த வேண்டும். எல்.இ.டி பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
பொதுமக்கள் விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட நிர் வாகம், எஸ்.பி., மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.