/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழைநீர் செல்ல சாலை உடைப்பு; கடலுாரில் அதிகாரிகள் அலட்சியம்
/
மழைநீர் செல்ல சாலை உடைப்பு; கடலுாரில் அதிகாரிகள் அலட்சியம்
மழைநீர் செல்ல சாலை உடைப்பு; கடலுாரில் அதிகாரிகள் அலட்சியம்
மழைநீர் செல்ல சாலை உடைப்பு; கடலுாரில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : அக் 25, 2025 02:48 AM

கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பத்தில் மழைநீர் செல்ல சாலையை உடைத்து வழி ஏற்படுத்தியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடலுார், பாதிரிக்குப்பம் குலசேகர அம்பாள் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் செல்ல பிள்ளையார் கோவில் எதிரில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தார் சாலையை உடைத்து பள்ளம் தோண்டி வழி ஏற்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும், இதுபோன்று சாலையை உடைத்து வழி ஏற்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இதன் காரணமாக அவசர தேவைக்கு கூட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் தெரிவித்தனர்.
சாலை சேதமாவதுடன் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விடுகின்றனர். மழைநீர் செல்ல நிரந்தர தீர்வாக பைப் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.