ADDED : ஜன 20, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அனுப்பும் வகையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நடந்து வரும் இப்பணிகளை ஜிண்டால் நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில், ஜிண்டால் நிறுவனம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, சிதம்பரம் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து, சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதில் சிதம்பரம் போக்குவரத்து போலீசார் மற்றும் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.