/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி துவக்கம்
/
ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி துவக்கம்
ADDED : ஆக 31, 2025 07:53 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காட்டுக் கூடலுார், பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சிகளில் சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது.
காட்டுக்கூடலுார் ஊராட்சியில் செம்மங்குப்பம் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டம் சார்பில் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் சிமென்ட் சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது.
முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் பூஜையை நடத்தி பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பி.டி.ஓ., மீரா கோமதி, ஒன்றிய பொறியாளர்கள் சங்கர், பாரி வள்ளல், மணிமொழி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், இளவரசி, தணிகாசலம் பூபதி, கனகவேல், ஆறிவழகன், சவுந்தரபாண்டியன், விஜயபாலன், சத்தியமூர்த்தி, பாலமுருகன், துரைசாமி.
பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், கிளைச் செயலாளர் சங்கர், ஊராட்சி செயலாளர்கள் நந்தகோபால், ரவி, பழனி, வீரமுத்து, சாரங்கன், ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.