/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூலை 22, 2025 07:58 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொஞ்சிக் குப்பத்தில் இருந்து புதுக்குப்பம், கொட்டிக்கோணாங்குப்பம் வழியாக இடையர்குப்பம் வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. தார்சாலை அமைக்கப்பட்ட இடம் மலை பகுதியாகும்.
சாலையின் இருபுறமும் பல இடங்களில் மெகா சைஸ் பள்ளம் அதிகளவு உள்ளது. இதனால் சாலையில் செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட கூட இடவசதி இல்லை. சாலையின் இருபுறமும் செம்மண் கொட்டாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, சாலையின் இருபுறமும் செம்மண் கொட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவேண்டு மென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.