/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேர்மனின் தொகுப்பு வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
/
சேர்மனின் தொகுப்பு வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
சேர்மனின் தொகுப்பு வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
சேர்மனின் தொகுப்பு வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்
ADDED : நவ 25, 2025 05:41 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சி சேர்மனின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை மழை காரணமாக பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி, கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
அப்போது, நள்ளிரவு 12:30 மணிக்கு பெண்ணாடம் பேரூராட்சியின் வி.சி., பெ ண் சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு என்பவரின், அம்பேத்கர் நகரில் உள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரை ஈரப்பதம் காரணமாக பெயர்ந்து விழுந்தது.
அதில், அமுதலட்சுமி, இவரது கணவர் ஆற்றலரசு, ஆற்றலரசுவின் தாய் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வருவாய்த்துறை மற்றும் பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.