
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே இறந்து கிடந்தவர் காட்டுமன்னார்கோவில் வாலிபர் என தெரிந்தது.
கடலுார், தலைமை தபால் நிலையம் அருகே நேற்று காலை இறந்து கிடந்தார்.
இதுகுறித்து மஞ்சக்குப்பம் வி.ஏ.ஓ,. சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் காட்டுமன்னார்கோவில், கொள்ளுமேட்டைச் சேர்ந்த பைரோஸ்,32; எனத் தெரிந்தது.
இறந்தவர் கடலுாருக்கு எதற்காக வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

