ADDED : நவ 02, 2026 03:59 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரியில், கூரை வீடு தீப்பிடித்து எரிந்து, சேதமடைந்தது.
கீழ் புவனகிரி பூராசாமி தோப்பை சேர்ந்தவர் குணசேகரன், 45; புவனகிரி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர். இவர் இன்று (நவ.,2) காலை விறகு அடுப்பில் தென்னை ஓலையை பயன்படுத்தி தண்ணீரை, சுட வைத்த பின், அடுப்பை அணைக்காமல் குளித்துவிட்டு கடைக்க சென்றுவிட்டார். அடுப்பில் இருந்த தீ, கூரை வீட்டில் பட்டு வீடு முழுவதும் எரிந்தது.
தகவலறிந்த, சிதம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து, புவனகிரி போலீசார் விசாரித்து, வருகின்றனர்.
