/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூரைவீடு எரிந்து சேதம் : நிவாரணம் வழங்கல்
/
கூரைவீடு எரிந்து சேதம் : நிவாரணம் வழங்கல்
ADDED : நவ 23, 2025 06:32 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது கூரை வீடு
மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமானது.
இதையறிந்த ராதாகிருஷ்ணன் எம்எல்.ஏ., சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார்.
அ்பபோது, தி.மு.க., ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், இளைஞரணி வீரபாண்டியன், வருவாய்துறை அதிகாரிகள் ராஜசேகரன், ஆனந்தி, காங்., நகர தலைவர் ரஞ்சித், வட்டார தலைவர் பீட்டர் சாமிகண்ணு மற்றும் தி.மு.க., - காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

