/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மது பாட்டில்கள் விற்பனை பெண் கைது
/
மது பாட்டில்கள் விற்பனை பெண் கைது
ADDED : நவ 23, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்துார் போலீசார் நேற்று வடப்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில், அவர் வடப்பாக்கம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி சங்கீதா, 41; என தெரியவந்தது.
இது குறித்து ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து சங்கீதாவை கைது செய்து, 6 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

