/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு
/
பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு
ADDED : ஏப் 09, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர், : பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பூரைச் சேர்ந்தவர் முருகேசன்,55; வேப்பூரிலுள்ள திருச்சி சர்வீஸ் சாலையில் பர்னிச்சர் மற்றும் பாத்திர பொருட்கள் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை 7:00 மணிக்கு அவர் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கடையின் பின்புற கதவை உடைத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திர பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.