/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு
/
ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு
ADDED : ஜூன் 11, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி, வட்டம் 2ஐச் சேர்ந்தவர் வெங்கடேசன், 58; இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7ம் தேதி வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருடு போன பொருட்கள் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.