/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.ஐ.,யை மாற்ற ஆளும் கட்சி பிரமுகர் 'அடம்'
/
எஸ்.ஐ.,யை மாற்ற ஆளும் கட்சி பிரமுகர் 'அடம்'
ADDED : நவ 27, 2024 08:15 AM
விருத்தகிரீஸ்வரர் வீற்றிருக்கும் நகர போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒரு போலீஸ் நிலைய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, கஞ்சா, கள்ளத்தனமாக மது, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது.
இப்பகுதியில் புதியதாக பொறுப்பேற்ற எஸ்.ஐ., சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் மிரண்டு போன கும்பல், தனக்கு வருமானம் பாதிக்கிறது என ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியை சந்தித்து அந்த எஸ்.ஐ.,யை உடனே மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் அவரோ என்னால் இப்பிரச்னையில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நொந்துபோன அந்த கும்பல் என்ன செய்வதென்று புரியாமல் முனுமுனுத்து வருகிறது.

