/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராமப்புற மதிப்பீடு: மாணவிகள் பேரணி
/
கிராமப்புற மதிப்பீடு: மாணவிகள் பேரணி
ADDED : ஏப் 04, 2025 05:03 AM

புவனகிரி: திட்டக்குடி, பொடையூர் ஜெ.எஸ்.ஏ.,வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவியர்கள், கிராமப்புற மதிப்பீடு குறித்து பேரணி நடத்தினர்.
திட்டக்குடி பொடையூர் ஜெ.எஸ்.ஏ., வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியர்கள், கீரப்பாளையம், வயலுார் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வயலுாரில் கிராம மதிப்பீடு குறித்து கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாணவி சண்முகப்பிரியா வரவேற்றார். ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் முன்னிலை வகித்தார். மாணவிகள் பவித்ரா, பிரதீபா, பிரியதர்ஷினி, பிரதீஷா, பிரவீனா, பிரியதர்ஷினி உள்ளிட்ட குழுவினர் கிராமங்களில், பொதுமக்களிடம் பல்வேறு தரவுகளை சேகரித்தனர்.
மாணவி சஞ்சனா நன்றி கூறினார்.

