/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் மது விற்பனை ரூ.23 கோடி கடந்த ஆண்டை விட கூடுதல் வருவாய்
/
பொங்கல் மது விற்பனை ரூ.23 கோடி கடந்த ஆண்டை விட கூடுதல் வருவாய்
பொங்கல் மது விற்பனை ரூ.23 கோடி கடந்த ஆண்டை விட கூடுதல் வருவாய்
பொங்கல் மது விற்பனை ரூ.23 கோடி கடந்த ஆண்டை விட கூடுதல் வருவாய்
ADDED : ஜன 18, 2025 02:02 AM
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் இந்த ஆண்டு 21 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
தமிழக அரசுக்கு வருவாய் தரக் கூடிய துறைகளில் அரசு டாஸ்மாக் கடைகள் தான் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசே நேரடியாக மதுக்கடைகள் நடத்தி வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் தற்போது 137 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த மதுக் கடைகள் மூலம் கடலுார் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1.50 கோடி ரூபாய்க்கு குறையாமல் விற்பனை நடந்து வருகிறது.
மதுபாட்டில்கள் விற்பனை தீபாவளி பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பல பண்டிகைளில் அதிகளவு மது விற்பனை நடந்து வருவது வழக்கம். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலையொட்டி இந்த ஆண்டு கூடுதல் மது விற்பனையானது.
போகிப்பண்டிகையான 13ம் தேதி 5.40 கோடி ரூபாயும், பொங்கலன்று 14ம் தேதி 9 கோடி ரூபாயும், காணும்பொங்கலன்று 16ம் தேதி 8.40 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 3 நாட்களில் 22.8 கோடி ரூபாய் விற்பனையானது.
கடந்த தீபாவளி பண்டிகையின்போது, 2 நாட்களில் 16 கோடி ரூபாய்க்கு நடந்த விற்பனையை விட அதிகம்.