/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா பருவ நெல் நடவு பணிகள்... அதிகரிப்பு: மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
/
சம்பா பருவ நெல் நடவு பணிகள்... அதிகரிப்பு: மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
சம்பா பருவ நெல் நடவு பணிகள்... அதிகரிப்பு: மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
சம்பா பருவ நெல் நடவு பணிகள்... அதிகரிப்பு: மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 03, 2025 01:54 AM

கடலுார்: மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து கடலுார் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா காவிரி டெல்டா பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளுடன் மாவட்டம் முழுதும் 3 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
முன்கூட்டியே கிடைக்கும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி நடவு செய்துவிட்டால் அதன் பின்னர் வடகிழக்குப் பருவ காற்றின் மூலம் கிடைக்கும் மழையை வைத்து நெல் சாகுபடி செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காற்றின் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதனால் குறுவை சாகுபடியே காவிரி டெல்டா பகுதிகளில் 7 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்தில், சம்பா நெல் நடவு செய்ய விவசாயிகள் நிலத்தை சமன் செய்து தயார்படுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் தற்போது நெல் நடவும் தீவிரமடைந்துள்ளது. சம்பா நெல் சாகுபடி தற்போது 50 ஆயிரம் ஏக்கர் உயர்ந்துள்ளது.
காரணம், கரும்பு, சவுக்கு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்த அளவுக்கு லாபகரமாக விலை போகவில்லை. கரும்பு ஆலை மூடப்பட்டுள்ளது. சவுக்கு மரங்கள் விலைபோகவில்லை.
அதே போன்று, பல மாதங்களாக பயிர் செய்து வந்த வாழையும் சரியான லாபகரமாக விற்பனையாகவில்லை.
மற்ற காய்கறி பயிர்கள் எல்லாம் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிருக்கு மாறினர்.
நெற்பயிரில் நடவு, களை எடுப்பதற்கு பதிலாக களைக்கொல்லி மருந்து, அறுவடைக்கு இயந்திரம் பயன்படுத்த குறைந்த செலவே ஆகிறது.
அத்துடன் அறுவடை செய்த நெல்லை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு சுலபமாக அரசே கொள்முதல் செய்கிறது.
இதுபோன்ற வசதி வேறு எந்த பயிரிலும் இல்லை. எனவே லாபம் குறைவாக இருந்தாலும் நெற்பயிரே சிறந்தது என விவசாயிகள் கருதுகின்றனர்.
அதன் காரணமாக நெற்பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.