/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம்
/
கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம்
கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம்
கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம்
ADDED : ஆக 20, 2025 07:41 AM
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், வரும் 28ம் தேதி சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி மாலை வாஸ்து பூஜைகள் நடக்கிறது. 26ம் தேதி காலை 10:30 மணி முதல் கும்ப மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்வான பூஜை, முதல்கால ஹோமம் நடக்கிறது.
மாலை 6:00 மணி முதல் அஷ்டபந்தனம் சாற்றுதல், இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. 27ம் தேதி காலை திருமஞ்சனம், மூன்றாம் கால ஹோமம் நடக்கிறது. மாலை உற்சவருக்கு 81 கலச திருமஞ்சனம், நான்காம் கால ஹோமம் நடக்கிறது.
28ம் தேதி காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாகசாலை, பூர்ணாஹூதி சாற்றுமறை, 7:00 மணிக்கு யாத்ராதானம், மஹா கும்பங்கள் புறப்பாடு நடக்கிறது. 8:30 மணிக்கு மேல் மூலவர் விமானங்கள் மற்றும் தோரணவாயிலில் புனித நீர் தெளித்து மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. பூஜைளை பட்டாச்சாரியார்கள் கோசகன், தேவநாதன் செய்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் சரவணரூபன், செயல் அலுவலர் ஞானசுந்தரம் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.