ADDED : நவ 05, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் மணிமுக்தாற்றில் டிராக்டரில் மணல் அள்ளுவதாக, வி.ஏ.ஒ., ஆசோக்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் இன்று (நவ.,5) அவர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, அதேபகுதியை சேர்ந்த பிரகாஷ்,45; கள்ளத்தனமாக டிராக்டரில் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வி.ஏ.ஓ., அசோக்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து பிரகா ைஷ கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
