/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரக்கன்று, பனை விதை நடும் நிகழ்ச்சி
/
மரக்கன்று, பனை விதை நடும் நிகழ்ச்சி
ADDED : செப் 30, 2024 06:00 AM

புவனகிரி: புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் ஏரி மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு சார்பில், ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆதிவராகநல்லுார் ஊராட்சி தலைவர் ஜோதிநாகலிங்கம் தலைமை தாங்கினார். ஏரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சதீஷ் வரவேற்றார். பரங்கிப்பேட்டை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துப்பெருமாள், கவுன்சிலர் கலைவாணி தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாவட்ட செயலாளர்கள் வி.சி., அரங்கதமிழ்ஒளி, த.வா.க., சேரலாதன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கவுதமன், தொழில்நுட்ப உதவியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் மோகன் நன்றி கூறினார்.