ADDED : அக் 22, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: நெய்வேலியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அசஸ் ஹெல்த் கேர் சர்வீஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 102 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை 6 லட்சத்த 14 ஆயிரத்து 890 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் குமார், பொருளாளர் ராகுல், நேஷனல் கல்வி நிறுவனர் அர்ஜூன், வள்ளலார் கல்வி நிறுவனர் ஜனார்த்தனன், மருங்கூர் ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சங்க பொருளாளர் மகராஜன் நன்றி கூறினார்.

